2014க்கு பிறகு நேரடியாக மோதிக் கொள்ளும் தல, தளபதி – வலிமை ரிலீஸ் தேதி காரணம்

நடிகர் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை ஹிந்தி தயாரிப்பாளரான போனே கபூர் தயாரிக்கிறார் இவர் இறந்த போன முன்னாள் தமிழ் நடிகை ஸ்ரீ தேவியின் கணவர்.

வலிமை படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது காரணம் கொரோனா நோய் தோற்று காரணமாக நிலவிவரும் ஊரடங்கு. தற்போது நிலவிவரும் சூழ்நிலையால் இந்த வருடத்தில் படப்பிடிப்புகளை தொடங்குவதற்கான எந்த சாத்தியக் கூறுகளும் இல்லை என வலிமை வட்டாரத்தில் தெரிவித்துவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் இந்த தொற்று நோய் முற்றிலும் முடிவடையும் வரை படப்பிடிப்பை தொடங்க வேண்டாம் என கூறியுள்ளார்.

வலிமை பாதி படத்திற்கு மேல் படப்பிடிப்பு செய்யப்படவில்லை அதனால் படப்பிடிப்பு தாமதாக துவங்கப்பட இருப்பதால், கண்டிப்பாக 2021 தீபாவளிக்கு தான் வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் விஜய் முருகதாஸ் இணையும் படத்தின் வெளியீடும் 2021 தீபாவளி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் 2014ல் போன்களின் பொது விஜயின் ஜில்லா – அஜித்தின் வீரம் மோதிக்கொண்டது போல் 2021ல் மீண்டும் விஜய்-அஜித் ஒரே தேதியில் மோதிக் கொள்கின்றனர்.

இதனால் இந்த வெளியீட்டை விஜய்-அஜித் இருத்தரப்பு ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top