சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா- 13 மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொன்டே வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

சென்னையில் 49 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் ஜூலை 15-க்குள் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை (1.5 லட்சம்) தாண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,211 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 5,316 பேருக்கும், திரு.வி.க.நகரில் 4,132 பேருக்கும், அண்ணாநகரில் 5,397 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 5,989 பேரும், தேனாம்பேட்டையில் 5,655 பேரும், திருவொற்றியூரில் 1,912 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 2,201 பேருக்கும், பெருங்குடியில் 944 பேருக்கும், அடையாறில் 3,057 பேருக்கும், அம்பத்தூரில் 1,982 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 1,229 பேருக்கும், மாதவரத்தில் 1,524 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 1,037 பேருக்கும், மணலியில் 798 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top