புல்புல் இந்த நூற்றாண்டின் சிறந்த படம்.. இயக்குனர் அனுராக் கஷ்யப் பாராட்டு

நெட்பிளிக்ஸ் மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இணைந்து தயாரித்துள்ள படம் Bulbbul நெட்பிளிக்ஸில் கடந்த ஜூன் 24ம் தேதி வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. இப்படத்தை பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கூறுகையில் : புல்புல் படம் ஒன் இன் எ மில்லினியம் என பாராட்டியுள்ளார் அதாவது லட்சங்களில் சிறந்த ஒன்று என்று பாராட்டியுள்ளார். இப்படத்தின் கதையை நான் ஒரு வருடத்திற்கு முன்னதாகவே படித்து இருக்கிறேன் அப்போது நான் என்ன நினைதேனோ அது அப்படியே வந்துள்ளது ஆனால் முற்றிலும் வேறு விதமாக சிறப்பாக. படத்தை பார்த்து முடித்த பிறகு, உடனே விஸ்கி அருந்தி விட்டு மீண்டும் படத்தை பார்த்தேன், ஒரு பேய் படம் எப்படி இப்படி ஒரு கவிதையாக தெரிகிறது என்றே தெரியவில்லை என்றார்.

புல்புல் படம் ஒன்றும் மிரட்டும் பேய் படம் அல்ல, ஆனால், ஒரு எச்சரிக்கை கொடுக்கும் கதை. எனக்கு பிடித்த வெகு சில படங்களான கோர்ட், ஃபாண்ட்ரி, சுப்பிரமணியபுரம், உடான், மசான், மக்தீ, தும்பட், லக் பை சான்ஸ், எஸ்.ஓ.டி., லையர்ஸ் டைஸ், அன்னயும் ரசூலும், கில்லா உள்ளிட்ட படங்களின் வரிசையில் புல்புல் படமும் இடம்பிடித்து விட்டது என்று பாராட்டியுள்ளார்.

இந்த படத்தில் இயக்குனரின் ஒரு வலுவான திரைப்பட இயக்கத்தின் குரல் தெரிகிறது, இது சிறந்த தொடக்கமாகும். இது உணமையாக உள்ளது என்று கூறியுள்ளார்

இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநரான அன்விதா தத் அவர்களை பாராட்டுகிறேன். இந்த படத்தை இயக்குவதற்க்காக அவர்கள் எடுத்துக்கொண்ட நேரத்தை நான் பார்த்து இருக்கிறேன், இந்த படத்தில் அது மிக வலிமையாக தெரிந்துள்ளது. படத்தில் அவரது பொறுமை, வேதனை, கோபம் மற்றும் பார்ப்பவர்களை மெய்மறக்கவைக்கும் தன்மை போன்றவை பிரதிபலிக்கிறது.

இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநரான அன்விதா தத், தயாரித்த அனுஷ்கா ஷர்மா, இசையமைத்த அமித் த்ரிவேதி, ஒளிப்பதிவு செய்த சித்தார்த் திவான், நடிகர்களான த்ரிப்தி திம்ரி, அவினாஷ் திவாரி, பரம்பிரதா, ராகுல் போஸ் மற்றும் பவோலி டாம் ஆகியோரின் உழைப்பை பார்த்து அசத்திட்டீங்க என்றும் அனுராக் கஷ்யாப் கொண்டாடி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top