கர்நாடக சிறைகளில் இருந்து விடுதலையாகும் 65 நபர்கள் – சிறை அதிகாரிகள் தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் விசாரணை நீதிமன்றம் அளித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் உறுதி செய்தது.

இதன் பிறகு திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாங்கள் தற்போது வகித்துவரும் பதவிகளுக்கு வந்தனர். தமிழக அரசியல் சூழலில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனை அடுத்து, பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சரணடைந்தார். 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அவரின் சிறை தண்டனை முடிவடைய உள்ள நிலையில் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆகஸ்ட் 14-ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக பாஜக நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் செய்திருந்தார்.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது, சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என்று தெரிவித்தனர்.

‘கர்நாடகா சிறைகளில் இருந்து, சுதந்திர தினத்துக்கு முன் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ள 65 பேரின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் சசிகலாவின் பெயர் இல்லை. அவருக்கு இன்னும் 6 மாத தண்டனை உள்ளது. முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை,” என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top