ஓடிடி-யில் வெளியாகும் சுஷாந்த்சிங்கின் இறுதி படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ஜூன் 14-ந் தேதி அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் அவரது உடலை போலீஸார் கண்டுபிடித்தனர். இவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று விசாரணைகள் நடந்து கொண்டுவருகிறது. சுஷாந்த்சிங் நடிக்கவிருந்த 7 படங்களை பாலிவுட் உச்சநட்சத்திரங்கள் செல்வாக்குகளை பயன்படுத்தி பறித்துக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங் மரணம் வாரிசு நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்ற சர்ச்சைகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சுஷாந்த் கடைசியாக நடித்த படம் ‘தில் பெச்சாரா’. முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர், கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது.

ஆனால் சுஷாந்தின் ரசிகர்கள் அவரது கடைசி படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் ஓடிடி வெளியீடு உறுதிசெய்யப்பட்டு நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர். ஜூலை 24-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை அனைத்து ரசிகர்களும் எந்தவித கட்டணமின்றி இலவசமாக காணலாம் என ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top