இந்தியாவில் ’லாக்அப்’ மரணத்தில் தமிழ்நாடு 2-வது இடம் – கனிமொழி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் உயிாிழந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னீக்கஸ் குடும்பத்திற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி உயிாிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.

உயிர் இழந்த குடுமபத்தினார்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் செல்வராணியிடம் கொடுத்தார். பின்னர் செல்போனில் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு திமுக உறுதுணையாக இருக்கும். சட்ட வடிவிலான உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதிமுக அரசு பதவியில் தமிழகத்தில் தொடர்ந்து சிறைகளில் பலர் மர்மமான முறையில் உயிர் இழந்து வருகின்றனர், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். லாக்அப் டெத்தில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top