சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி

பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியின் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. கொரோனா நோய் தோற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா முழுவதும் கொரோனா நோய் தோற்று அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்துவருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் பயத்தில் இருந்தனர் தேர்வை ஒத்திவைக்கும்படி பலர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு என மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top