தயாரிப்பாளரே அருண் விஜய்க்கு வில்லனாக மாறிவிட்டார் – படம் வெளிவருமா?

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முக்கிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அருண் விஜய்யின் பாக்ஸர் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அருண் விஜய், ரித்திகா சிங் பிரதான வேடங்களில் நடிக்கும் பாக்ஸர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது யார் என்று முடிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த வேடத்திற்கு பல நடிகர்களை அணுகியபோதும் அந்த கதாபாத்திரத்திற்கு முழுமை அடையும்படி யாரும் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சரியான நபரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட தேடல் இப்போது முடிவுக்கு வந்து விட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் மதியழகனே இந்த வேடத்துக்கு பொருத்தமானவர் என்று ஒட்டு மொத்த படக்குழுவும் தற்போது முடிவுசெய்துள்ளது.

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தைத் தயாரித்த வி.மதியழகன், தற்போது ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மகா படத்தைத் தயாரித்து வருகிறார். ராஜா மந்திரி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, செம போதே ஆகாதே, மற்றும் அப்பா ஆகிய படங்களையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று பிரச்னைகள் முடிவுக்கு வந்ததும், முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top