இந்தியாவில் காசநோய் உயிரிழப்பு ஒரு லட்சத்திற்கு அதிகரிக்கும் – ஆய்வறிக்கையில் அதிர்ச்சி

கொரோனா நோய் தோற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது மேலும் இதன் பரவும் தண்மையும், உயிர் இழப்பும் அதிகமாக உள்ளதால் உலக நாடுகள் இந்த நோயின் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகமும், லண்டன் மருத்துவ கல்லூரியும் இணைந்து கொரோனா வைரஸ் தோற்று, காசநோயில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தின. அதன் ஆய்வு முடிவுகள் ஐரோப்பா பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பின் மெக்குவாய்ட் கூறியிருப்பதாவது:-

காசநோயும் கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் போன்றதுதான். காசநோய் பாதிப்பில் உலக அளவில், சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 40 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. காசநோயும், கொரோனா வைரசை போலவே, நோயாளியின் வாய், மூக்கில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் படுவதால் மற்றவர்களுக்கு பரவுகிறது.

ஆனால், தற்போது, உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால், காசநோய்க்கான பரிசோதனையும், சிகிச்சையும் குறைந்துவிட்டது. அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், குறைந்த நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் காசநோய் சிகிச்சை கிடைப்பது இல்லை. இந்த சுகாதார சேவை குறைபாடு காரணமாகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் தாமதமும், பின்னடைவின் காரணமாக காசநோய் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.

சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஒன்றில் இருந்து இரண்டு லட்சம் பேருக்கு காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படும்.

இந்தியா போன்ற பின்தங்கிய மருத்துவ கட்டமைப்புகள் கொண்ட நாடுகளில் கூடுதலாக 95 ஆயிரம் பேரும், சீனாவில் கூடுதலாக 6 ஆயிரம் பேரும், தென்ஆப்பிரிக்காவில் கூடுதலாக 13 ஆயிரம் பேரும் காசநோய்க்கு பலியாவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top