வாரிசு நடிகையாக இருப்பதில் பெருமை சோனம் கபூர்; பாலிவுட்டில் வாரிசு ஆதிக்கம்

நடிகர் சுஷாந்த் சிங் மருமமான மரணம் இந்திய திரையுலகை பெரிதும் பாதித்துள்ளது. அவர் இறந்ததற்கு சுஷாந்த் சிங் நடிக்க இருந்த 7 படங்களை பாலிவுட்டின் பெரும் நடிகர்கள் தங்கள் செல்வாக்குகளை பயன் படுத்தி அந்த படங்களில் சுஷாந்த் சிங்கை நடிக்கவிடாமல் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சுஷாந்த சிங்கிற்கு மக்களிடையே பெரும் ஆதரவும் அவர் இறப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் படியும் சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர். மேலும் பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் கான் மற்றும் கபூர் வாரிசுகளின் செயலே இந்த மாதிரியான திறமையான நடிகர்கள் முன்னேற முடியாமல் தற்கொலைக்கு செல்கிறார்க்க்ள் என்று கூறி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்ததாலேயே மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் பிரசாரம் செய்கின்றனர்.

நடிகர் சத்ருகன் சின்காவின் மகளும் நடிகையுமான சோனாக்சி சின்ஹாவையும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டதால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறினார். பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரின் வலைத்தள பக்கத்திலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டனர். வாரிசு அரசியலால்தான் சோனம் கபூருக்கு இந்தி பட வாய்புகள் கிடைத்துள்ளன என்று பதிவிட்டனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சோனம் கபூர், ‘’நான் எனது தந்தையின் மகள்தான். அவரால்தான் எனக்கு இந்த இடம் கிடைத்து இருக்கிறது. விஷேச சலுகையும் பெற்றுள்ளேன். இது எனக்கு அவமானம் இல்லை. பெருமையாகவே நினைக்கிறேன். என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு எனது தந்தை கடுமையாக உழைத்துள்ளார். நான் யாருக்கு பிறந்தேன் என்பது எனது விதி. எனது தந்தைக்கு மகளாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகை சோனம் கபூரின் இந்த பதிவு மேலும் பாலிவுட்டில் ஆதிக்கம் நிகழ்ந்து வருவதை வெளிப்படையாக காட்டுகிறது. திறமையான பலர் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்கள் ஆனால் இவர்கள் குடும்பப் பின்னணியை வைத்தும் வாரிசு பட்டத்தை வைத்துக்கொண்டு வருவதால் இந்திய திரையுலகின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top