கடைதிறந்த குற்றத்திற்காக தந்தை, மகன் இருவரையும் போலீஸ் அடித்து கொலை!ஐகோர்ட் சுயமோட்டோ வழக்கு

சாத்தன்குளத்தில் அதிக நேரம் கடை திறந்த குற்றத்திற்காக தந்தை-மகன் இருவரையும் போலீஸ் அடித்து கொன்று இருப்பது குறித்து ஐகோர்ட் சுயமோட்டோவாக வழக்கு பதிவு

சாத்தன்குளத்தில் அதிக நேரம் கடை திறந்த குற்றத்திற்காக தந்தை-மகன் இருவரையும் போலீஸ் அடித்து கொன்று இருப்பது காவல்துறைக்கே அவமானம். இந்த பச்சை படுகொலைக்கு படுகொலைக்கு நீதி வேண்டும். கொரொனோ நெருக்கடியைப் பயன்படுத்தி அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுக்கும்படி முறையீடு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக கண்டித்தனர். இதில்சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இருவர், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு (suo-moto case) செய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு உத்தரவிட்டது.

மனித உரிமை ஆணைய டிஜிபி இதுகுறித்து நேரடியாக விசாரித்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து (suo-moto case) டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை (suo-moto case) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சூரியபிரகாசம் இந்த முறையீட்டைச் செய்தார். “மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் அவரது முறையீட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.

பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

கோவைப்பகுதியில் சாராயக்கடையை எதிர்த்துப் போராடிய பெண்களை அறைந்த அதிகாரியின் வன்முறை காணொளியாக அம்பலமான பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


திருச்சியில் வாகனத்தில் சென்ற கணவன் -மனைவிக்கு நடந்த வன்முறை, மதுரையில் கர்பிணிப் பெண்ணுக்கு நிகழ்ந்த வன்முறை என அரச நிறுவனங்களின் வன்முறைகள் தண்டிக்கப்பட்டதில்லை.

ஸ்டெர்லைட்டில் நடந்த படுகொலையை நிகழ்த்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கைகள் ஏதுமில்லை.

ஸ்னோலினை படுகொலை செய்த கரங்களில் இதுவரை விலங்குகள் பூட்டப்படவில்லை என்பதே இது போன்ற வன்முறைகள் தொடர்ந்து நிகழக் காரணம். என பொதுமக்கள் அரசை நோக்கி கேள்வியை கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top