சீனாவை காப்பாற்றி இந்திய ராணுவவீர்களுக்கு துரோகம் செய்கிறார் மோடி – ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசின் கையாளாகாத தனத்தை தொடர்ந்து சாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

பாஜகவின் தலைமையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தோல்வி ஏற்பட்டதால்தான் சீனா தாக்குதல் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காங்கிரஸின் செயற்குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி மீதும் பாஜக மீதும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சீனா நம்மது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, அதை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. சீனா வெளிப்படையாகவே இந்தியா எல்லையை தங்களுடையது என்று அறிவிப்பதும், இது இந்தியாவுடைய நில்லாமில்லை என்று கூறுகிறது. ஏன் பிரதமர் மோடி சீனாவை காப்பாற்றுகிறார்? இந்தியாவையும் நம்மது ராணுவத்தையும் ஏன் காப்பாற்ற தவருகிறார்? என்று கடுமையாக சாடியுள்ளார்.

சீனா பத்திரிகையான குளோபல் டைம்ஸ் ஏன் பிரதமர் மோடியை பாராட்டுகிறது? ராஜதந்திர கட்டமைப்பை பிரதமர் மோடி தகர்த்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறியதன்மூலம் நமது நிலைப்பாட்டை பிரதமர் உடைத்துள்ளார் என்றும் ராகுல்காந்தி சாடினார்.

பிரதமர் நமது ராணுவத்தை காட்டிக்கொடுத்துள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top