கொரோனாவுக்கு போலி மருந்து; பதஞ்சலியின் விளம்பரத்தை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தல்!

மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பாபா ராம்தேவின் மருந்து நிறுவனம் கொரோனாவிற்கு போலி மருந்து விற்பனை மத்திய அரசு கண்டிப்பு

மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து அவர்களது நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங். தன்னிச்சையாக அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

இந்நிலையில், இந்தூர் மாவட்ட ஆட்சியர் பதஞ்சலி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் தரவில்லை என்றும். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங்கிடம்  உறுதி அளித்து இருந்தார்.இது நடந்தது கடந்த மாதம்

இப்போது திடீரென பாபா ராம்தேவ் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செவ்வாயன்று ‘கொரோனானில் மற்றும் ஸ்வாசரி’ என்ற இரண்டு ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்து பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார்

எல்லா விதிகளையும் மீறி அரசியல் பலம் ஒன்றை துணையாக கொண்டு ஒட்டுமொத்த கொரோனா நோயாளிகளின் உயிரிலும் பணம் தேடும் பாபா ராம்தேவின் இந்த செய்கை மக்கள் விரோதமானது இது ஆளும் பாஜக அரசுக்கு பின்னடைவை தரும் என்றெண்ணி இந்த  மருந்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் இந்த மருந்தின் விளம்பரங்களை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது

பாபா ராம்தேவின் நிறுவனம் இந்த மருந்தை சோதனைகளை ஏதும் செய்யாமல் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியையும் பெறாமல் நேரிடையாக மக்களுக்கு விளம்பரம் செய்து வருகிறது இது சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்திருந்தால் பரிசோதனை செய்த எல்லா ஆவணங்களையும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது   

இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி ‘ஆயுர்வேத கோவிட்-19’  சிகிச்சை குறித்த ஆவணங்கள் ஏதும் அதன் மூலக்கூறுகள் எவையும் அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மருந்தின் பெயர், உள்ளிடப்பட்ட மருந்துப் பொருட்களின் சேர்க்கை விவரம், எந்த மருத்துவமனையில் யார் யாரிடம் இந்த மருந்து சோதனை செய்யப்பட்டது, நடைமுறை, சாம்பிள் அளவு, நிறுவன அறவியல் கமிட்டி அனுமதி, கிளினிக்க சோதனை பதிவு விவரம், ஆய்வின் முடிவு தரவுகள் ஆகியவற்றைக் கேட்டுள்ளதோடு, முடிவுகள் தெளிவுபடுத்தப்படும் வரை இந்த மருந்துக்கான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும் ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பந்தப்பட்ட மருந்து உரிம ஆணையத்திடம் இதற்கான உரிமம் வழங்கிய நகல்கள், மருந்து அனுமதி ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.

இதற்கிடையே இந்த மருந்தை ஆய்வு செய்த மருத்துவ ஆய்வாளர்கள் தரப்பில் இன்னும் முடிவுகளை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 100 நோயாளிகளை இந்த மருந்துக்கான சோதனைக்காகத் தேர்வு செய்துள்ளனர். இதில் 50 பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது, 5 பேர் பாதியிலேயே சோதனையிலிருந்து விலகியுள்ளனர். மீதி 50 பேருக்கு பிளாசிபோ முறையான மனோவியல் ரீதியாக இந்த மருந்து அளிக்கப்பட்டுள்ளது.என்பது தெரியவருகிறது

இந்நிலையில் கொரோனாவிற்கு கண்டுபிடித்த போலி மருந்தை உடனடியாக தடை செய்யவும் அவரை பேரிடர் சட்டவிதிகளின் படி கைது செய்யவும் கோரிக்கைகள் எழும்புகின்றன  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top