கொரோனா நேரத்திலும் ‘லாக்அப்’ மரணங்கள்; இருஉயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லாக்அப்’ மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவருவதால், இச்சம்பவத்தை கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:-

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ்- அவரது மகன் பென்னிக்ஸ். ஊரடங்கு காலம் என்பதால் கடையடைப்பது தொடர்பாக கடந்த 19-ம் தேதி காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பென்னீக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போட்டு, பென்னீக்சையும் அவரது தந்தை ஜெயராஜையும் கடந்த 19-ம் தேதி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் மகன் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்ட போது அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பிறகு தந்தை ஜெயராஜூம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரும் இறந்துவிட்டார். இப்படி இருவரும் காவல்துறை கண்காணிப்பில் மர்மமான முறையில் உயிர் இழந்துள்ளனர்.

காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் காவலர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களது உறவினர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு, திருச்செந்தூர் – நாகர்கோவில் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பேரழிவை உருவாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது, இதை கட்டுப்படுத்த முடியாமல் அரசு செயலற்று நிற்கும் நிலையில். இந்த நெருக்கடியிலும் வாய்த்தகராறு காரணமாக, தந்தை-மகன் என இரண்டு உயிர்களை பறிக்கும் அளவுக்கு காவல்துறை நடந்து கொள்கிறது என்றால், இது திரைமறைவு போலீஸ் ஆட்சியா?

போலீஸ் ‘லாக் அப்’பில் இதுவரை நடந்த மர்ம மரணங்கள், இன்று நீதிமன்றக் காவல் என்று சொல்லப்படும் சிறைகளிலேயே பகிரங்கமாக நடக்கின்றன என்றால், இதுமக்களால் தேர்ந்துஎடுக்கப்பட்ட ஆட்சிதானா?

மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு உரிய பதிலளிக்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் தானே? ஏன் இன்னும் பதிலளிக்காமல் உள்ளார். பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் தீர்வு?

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top