கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனையில் தாய்லாந்து வெற்றி

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில் சில நாடுகள் மருந்துகளை கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருகின்றன.

அந்தவகையில் தாய்லாந்து நாடும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து உள்ளதாக தாய்லாந்தின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை முதற்கட்டமாக மே மாதம் 23-ந்தேதி குரங்குகளுக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது. சராபுரியில் உள்ள தேசிய முதல்நிலை ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி அடைந்து உள்ளது. முதற்கட்ட சோதனையில் தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் எவ்வித பக்க விளைவுகளும் இன்றி நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த குரங்குகளுக்கு அடுத்தகட்ட பரிசோதனைக்காக நேற்று 2-வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டது. குரங்குகள் தொடர்ந்து கண்கணிக்கப்பட்டு அதன் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதா என்று 2-வது டோஸ் ஏற்றப்பட்டு சோதித்துவருகிறோம், இன்னும் இரண்டுவரங்களில் கான் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று எண்ணுகிறோம் இவ்வாறு என்.ஆர்.சி.டி பொதுச்செயலாளர் டாக்டர் சிரிருர்க் சாங்சிவிலாய் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனையும் வெற்றி பெற்றால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என தாய்லாந்து அறிவியல், உயர்கல்வி, ஆய்வுத்துறை மந்திரி சுவிட் மாய்சின்சீ தெரிவித்தார்.

தாய்லாந்து நாடு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து முதற்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருக்கும் விவகாரம் உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top