கார்த்தியின் “கைதி 2” ஆரம்பம்.. இயக்குனரின் மாஸ் அப்டேட்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் எல்லாம் வேலைகளும் முடிந்து கொரோனா காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

மேலும் இவர் மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கைதி 2 படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் கார்த்தியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் “பொன்னின் செல்வன்” படத்தில் கார்த்தி நடித்து வருகிறார், கொரோன காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு முடிந்தும் பொன்னின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாக துவங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சிறு இடைவெளி காலத்தை பயன்படுத்தி “கைதி 2” படத்தை முடித்து விடலாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது கைதி படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்கை லோகேஷ் கனகராஜ் துவங்கி விட்டார் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top