கொரோனா ஊரடங்கு; சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்!

கொரோனாவால் பாதிப்பு வருமோ என உயிர் பயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழக மக்களுக்கு திடீரென தமிழக மின்சார வாரியம் ஒரு குண்டை தூக்கி போட்டது.

கடந்த மாத மின்கட்டணத்தில் பழைய நிலுவை தொகையையும் சேர்த்து மொத்தமாக கணக்கிட்டு இந்த மாத இறுதிக்குள் கட்டவேண்டும் என அறிவித்திருந்தது.

எதிர்க்கட்சி தலைவர்கள்,  அரசியல் இயக்கங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சிலபேர் உயர்நீதிமன்றத்தை நாடினர். அதன் பிறகு மின்சாரவாரியம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது.   

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை ஜூலை 15-ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தலாம். இணைய தளம் வாயிலாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top