விஜயின் “மாஸ்டர்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…OTTயில் வெளியாகிறதா ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரை எதிர்த்து வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் தான் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதமே வெளிவரவிருந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. பின் இந்த படம் OTT-யில் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன அதற்கு ஏற்றார் போல் OTT நிறுவனங்களும் விஜயின் மாஸ்டர் படத்தை வாங்க 100 கோடிக்கும் மேல் தர தயாராக இருந்தன.

ஆனால் இதனை படக்குழு முற்றிலும் தவிர்த்து ஒரு செய்தியை வெளியிட்டது. இப்படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என வெளிப்படையாக கூறிவிட்டனர்.

இந்நிலையில் இப்படம் வரும் 2021 பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜூன் 22 விஜய் பிறந்தநாள் அன்று அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top