தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று: 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்தள்ளது. இன்று 41 பேர் உயிரிழந்தனர்

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரிகத்த வண்ணம் உள்ளது.

இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 30,271 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 41 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 666 பேர் உயிரிழந்துள்னர்.

இன்று ஒரே நாளில் 27537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 25902 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,573 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 2,04,711-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் வெளியிட்டதாவது:..

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 30,271 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். 1,630 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 666-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,322 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் ஜூன் மாதத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 506-ஆக பதிவாகி உள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 83 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 7,89,408 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,537 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 2,115 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 33,520 ஆண்கள், 20,909 பெண்கள், 20 திருநங்கைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

 மகாராஷ்டிரா – 13, டெல்லி – 15,   கேரளா – 01,  ராஜஸ்தான் – 02, கர்நாடகா – 3,  பீகார் – 2, ஜார்கண்ட் – 1

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

சிங்கப்பூர் – 2,  மாலத்தீவு – 1


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top