சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் ரைட்ஸ் – பல கோடிக்கு விற்றுப்போனது; பிரபல பாலிவுட் ஸ்டார் நடிக்கிறார்!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணாமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. சமீபத்தில்தான் சூரரைப்போற்று படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றது.

ுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்ணாமுரளி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. சமீபத்தில்தான் சூரரைப்போற்று படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றது.

மே மாதம் ரிலீசாக வேண்டிய இந்த திரைப்படம் தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர்தான் ஷாகித் கபூர். தற்போது அதே தெலுங்கில் உருவாகிய ஜெர்சி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஹிந்தி ரீமேக் உரிமைக்காக பிரபல நிறுவனத்திடம் பிரத்யேகமாக படத்தை காட்டியதும், அந்த நிறுவனம் உடனடியாக சூர்யா கேட்ட சுமார் 30 கோடி தொகையைக் கொடுத்து இந்தி ரீமேக் உரிமையை வாங்கி விட்டதாகவும் தெரிகிறது.

இதுகுறித்தன அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் சூர்யா வெளியிடுவார் என கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top