அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் “சச்சி” காலமானார் – சோகத்தில் மலையாள திரையுலகம்

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இப்படத்தை இயக்கியவர் கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்ட கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. என்பவர்

48 வயதாகும் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் ஜூன் 15ஆம் தேதி முழு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின் திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சச்சியின் மறைவு செய்தி வெளிவந்ததை அடுத்து மலையாள திரையுலகம் துக்கத்தில் மூழ்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top