நியூசிலாந்தில் தீவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு

நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள தீவு ஒன்றில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

நியூசிலாந்து நாட்டின் வடகிழக்கில் சுமார் 1000 கி.மீட்டர் தொலைவில் உள்ள தீவு கெர்மெடெக். இந்த தீவின் தெற்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது.

நிலநடக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்து அவசரகால நிர்வாக அமைப்பு, ‘‘நிலநடுக்கத்தால் ஏற்பட இருக்கும் அச்சுறுத்தலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நியூசிலாந்து நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கு இல்லை. யாரும் வீட்டை வீட்டு வெளியேறவில்லை’’ என்று தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top