இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2 – இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விருப்பப்பட்ட ஒன்றாகும்.

மேலும், சுமார் மூஞ்சி குமாரின் கதாபாத்திர வடிவமைப்பை மிகவம் நேர்த்தியுடன் கோகுல் கையாண்டு இருப்பார். ஹீரோக்களுக்கான எந்த ஒரு பீல்ட்-அப்ம் இல்லாமல் நாம் வாழ்க்கையில் அன்றாடம் பார்த்து கடந்து செல்லும் மனிதர்களை சற்று சினிமாவுக்காக மற்றம் செய்து நேர்த்தியான ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இந்த கதையின் வெற்றியே இதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்பது மிகவும் உண்மை. சமிபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கோகுல் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பார்ட் 2 படத்திற்கு ” கொரோனா குமார் ” என டைட்டில் வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top