வேட்டையாடு விளையாடு 2 ஸ்கிரிப்ட் ரெடி – கமல் பதிலுக்காக காத்துஇருக்கும் கவுதம் வாசுதேவ்

கமலஹாசன் நடிப்பில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் 2006-ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இவரின் பெருமபாலான படங்கள் போலீஸ் ஸ்டோரியாகவே இருந்து வருகிறது. அட இவருக்கு இதவிட்டா வேற படமே எடுக்க தெரியாத என விமர்சகர்களும், நெட்டிசன்களும் பலமுறை விமர்சித்துள்ளனர்.

கொரோன தோற்று ஊரடங்கு காரணமாக பல இயக்குனர்கள் தங்கள் கதைகளை எழுதி ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான 120 பக்க கதை ரெடி ஆகி விட்டதாக கௌதம்மேனன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தற்போது கட்சி வேளைகளில் மும்மரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கமல் ஹாசன் போட்டியிடுகிறார் அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து இந்தியன்2 மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய இரண்டு படங்களையும் உருவாக்குவதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்தியன்-2 படத்தை தன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இதற்கு இடையில் கௌதம் வாசுதேவ் உடன் ஒரு கமர்சியல் படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம். கையில் தற்போது உள்ள இந்த இரண்டு படங்களை முடித்து வெளியான பிறகுமட்டுமே எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என சோகம்கலந்த எதிர்பார்ப்புடன் பதில் தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top