லாபவெறியில் தியேட்டர்கள் – நம்பிக்கை இழந்த இயக்குனர்கள்; OTT-யில் அடுத்த 200 படங்கள் ரிலீஸ்.

தியேட்டர்கள் மற்றும் மல்ட்டிபிளேக்ஸ் தியேட்டர்கள் எனும் பேரில் வசூல் வேட்டை செய்து கொண்டு இருந்த திரையரங்கங்கள் இப்பொது கண்ணீர் நடித்துக்கொண்டு இருக்கின்றன இதற்கு காரணம் OTT பிளாட்பார்ம்.

ஒரு நபர் படம் பார்க்க சென்றால் தியேட்டர் டிக்கெட் விலை 180, பாப்கார்ன் 150, கூல் ட்ரிங்க்ஸ் 100, தண்ணி பாட்டில் 50, பைக் பார்க்கிங் ஒரு மணிநேரத்துக்கு 60 மூன்று மணிநேர படத்திற்கு 180 கிட்டத்தட்ட படத்தின் டிக்கெட் விலைக்கு வசூலிக்கப்படுகிறது. ஒரு சாமானிய நபரோ அல்லது குடும்பமோ தியேட்டர்க்கு சென்று படம்பார்ப்பது கனவாகி பொன்னது இதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ் போன்ற கருப்பு சந்தையில் படத்தை வெளியிட்டு வளர்ந்து விடுகிறார்கள். முழுக்க முழுக்க கார்பொரேட் லாப வெற்றியாகவே மாறிப்போய் இருக்கிறது தியேட்டர்கள்.

இந்த 100 படங்களும் ஓரளவு லாபம் அல்லது பாதி பணம் கிடைத்தாலே அவர்களுக்கு வெற்றிதான். ஒரு சில படங்கள் 50, 60 லட்சத்தில் படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக OTT-இல் ரிலீஸ் செய்யலாம் படம் நன்றாக இருந்தால் பேரும் கிடைக்கும் பணமும் கிடைக்கும்.

50, 60 லட்சத்துல புதுசா ஒருத்தன் படம் எடுத்து ரிலீஸ் பண்ண வந்தா அவன மதிக்கறதே இல்ல கேட்டால் பெரிய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் பெரிய ஹீரோக்களுக்கு தான் முக்கியத்துவம் என்று அவர்களை அலைக்கழித்து ஒதுக்கிவைத்து. இதன் காரணமாக படம் வெளிவராமல் பலர் திறமையான இயக்குனர்கள் சினிமாவே வேண்டாம் என்று எல்லாம் வெளியேறி இருக்கிறார்கள். அப்படியே கெஞ்சுனா ஒரே ஒரு ஷோ மட்டும் ரிலீஸ் செய்றது.

இது இப்படி இருக்க ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இந்தப் பத்து பெரும் வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள் இதை கணக்கில் கொண்டால் 10 படங்கள்தான் இவர்களுடையது அதுவும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி மோசமான கதை, திருடி எடுக்கப்பட்டு காட்சிகள் பழையே அரைத்த மாவு கதையும் அதே இயக்கும் திரணைமட்டும் வெளிவரும் படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. சமீபகாலமாக இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களே கூறி வருகின்றனர். பத்து படங்களை வைத்துக் கொண்டு சினிமா தியேட்டரில் ஓட்டுவது மிகவும் கடினம்.

அந்த பத்து படங்களும் நன்றாக நல்ல படமாக இருந்தாலும் ஒரு வாரம் மட்டுமே ஓடுகின்றன. அப்படி அதையும் மீறி ஒரு சில படங்கள் நன்றாக இருந்தால் பத்து பதினைந்து நாட்கள் ஓடும். திரையரங்குகளின் லாபநோக்கம், கோடிக்கணக்கில் நடிகர்களுக்கு சம்பளம் அதில் பெரும் நடிப்பும் இருக்காது, ஹாலிவுட்யில் இருந்து திருடுவது அல்லது பழையகாலத்து இயக்கும் திறன் கொண்ட இயக்குனர்கள், மத்திய அரசின் வரி சுமை என இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு மத்தியில் தியேட்டர்கள் இனிமேல் இயங்குவது என்பது கேள்விக்குறி தான்.

அதனை வீட்டிலோ செல்போனிலோ படத்தைப் பார்த்தால் ரசிக்கும்படியாக மாரி வருகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் புதிதாக இறங்கிய OTT பிளாட்பார்ம் தான். ஹாலிவுட் பாலிவுட்டில் OTT-க்கு என்றே தனியாகப் படம் எடுத்து அதை ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் நாம் தியேட்டருக்கு படம் எடுத்துவிட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல் போராடி வேறு வழியில்லாமல் OTT-இல் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இப்படி இதுவரை 200, 300 படங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக அதில் ஒரு நூறு படங்கள் வெளி வருகிறது. இந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிக்காமல் தியேட்டர்கள்காரர்கள் இவர்களை ஓடவிட்டு அலைய விட்டு படாதபாடு படுத்தி விட்டார்கள். அதனால் நல்ல விலைக்கு OTT-யில் வருவதால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள் அதற்கு ஏற்றாற்போல் லாபமும் பெறுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top