விஜய் பிறந்தநாள் அன்று பிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ரிலீசாகும் பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீபாவளி அன்று வெளியாகிய படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சற்றும் ஏற்றுக்கொள்ளாதபடியான காட்சி அமைப்புகள், தொய்வு அடைந்த திரைக்கதை என பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தது இந்த படம். மேலும், இந்த படத்தில் பல காட்சிகள் ஹாலிவுட் மற்றும் மற்ற நாடுகளின் படங்களில் இருந்து திருடி பயன்படுத்தப்பட்டதாக ஆதாரத்துடன் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பம் இயக்குனர் அட்லீக்கு பெரும் பின்னடைவை தந்தது அதுமட்டும் இல்லாமல் இன்றுவரை அவரின் அடுத்த படத்திற்கான முடிவுவராமல் இருக்கும் நிலைக்கு தள்ளியது. இருந்தும் நடிகர் விஜய் நடித்ததால் இந்த படம் தமிழகத்தில் நல்ல வசூல் செய்தது என்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஜெர்மனியில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த படங்களை திரையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், இந்தாண்டு பிகில் படத்தை அரசாங்க நிபந்தனைகளுடன் திரையிட உள்ளனர். பிரான்சில் வருகிற ஜூன் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிகில் படம் திரையிடப்பட உள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பான கோரிக்கையை நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top