வைகோ வழக்கு; மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக வழக்குகளில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கக் கோரி திமுக, அதிமுக, பாமக, திராவிடர் கழகம் ஆகியவை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், மருத்துவ மேற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராகச் சேர்க்க மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதாரத் துறையும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வழக்குத் தொடர்ந்தனர். இன்று இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது இந்த மனுக்கள் குறித்தும் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மற்ற அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளுடன் சேர்த்து ஜூன் 22-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top