சுஷாந்த் கொலையா? தற்கொலையா..? சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் காரணம் என வழக்கு பதிவு

பாலிவுட்டில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 14ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டநிலையில் போலீஸார் அவர் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். அவர் மன அழுத்தத்தால் தான் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று தெளிவான முடியுவுகள் தெரியாமல் உள்ளது.

பாலிவுட் திரையுலகில் நிகழும் தொழில் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுஷாந்தின் குடும்பத்தார், காதலி, நண்பர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிச்சோரே படம் பெரும் வெற்றிபெற்றது இதன்பிறகு சுஷாந்த் சிங் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். கடந்த ஆறு மாதங்களில் அந்த 7 படங்களும் சுஷாந்திடம் இருந்து கை நழுவியது எப்படி யாராலால் இது நிகழ்ந்தது என்று சஞ்சய் நிருபம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட்டின் கொடூர குணம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை கொன்றுவிட்டது என்று சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டியுள்ளார். மும்பையில் நடந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் இறுதிச் சடங்கில் சஞ்சய் நிருபம் கலந்து கொண்டார்.

இந்நிலையில், அவரது மரணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோகர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுதவிர அவரது சில படங்கள் ரிலீசாகவில்லை. இதுவே அவர் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருக்கும். அவர்கள் திட்டமிட்டு சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top