பிரதமர் சீனா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆசிய கண்டத்தின் வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் தங்கள் நீண்ட எல்லையில் அடிக்கடி மோதலின் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.  மேலும்  இரு ராணுவ வீரர்களுக்கு இடையிலான ஒரு பயங்கர மோதலில் இந்த வாரம் பதற்றங்கள் அதிகரித்து உள்ளன.

லடாக் பகுதியில் நேற்று சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தார்கள் என வெறும் செய்தி மட்டும்தான் வருகிறது அது உண்மையா இல்லை வதந்தியா என்பது தெரியவில்லை

இந்த நிலையில் எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? அவர் மறைந்திருப்பது ஏன்?எனவும் சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?

அவர் ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்?

போதும் போதும். என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சீனா நம் வீரர்களைக் கொல்ல எவ்வளவு தைரியம்?

எங்கள் நிலத்தை அவர்கள் எவ்வளவு தைரியமாக எடுத்துக்கொள்கிறார்கள்? என ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top