தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் முககவசம், கையுறை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம், கையுறை வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு பலவிதமான நெருக்கடிகளை கொடுக்கிறது

அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வர வேண்டும், பதிவேட்டில் கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும் என வலியுறுத்துவதை கைவிட வேண்டும், பஸ் நிறுத்தங்களில் பணியமர்த்தப்படும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்.

அரசின் வழிகாட்டுதலுக்கு மாறாக கூடுதல் பயணிகள் இருந்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவை கண்டிப்பது, பஸ் நிலையங்கள், பணிமனைகளில் கழிவறை, ஓய்வறைகளை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். போதிய அளவு முக கவசம், கையுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2 மற்றும் உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய பணிமனைகள் முன்பும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top