முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்த ஷங்கர் – ரஜினி கமல் இனி தேவையில்லை!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஆதிக்கம் செய்து வரும் இரண்டு முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். இருவருக்குமே தனி ஸ்டைல் மற்றும் திரைத்துறையில் வணிக வட்டாரங்கள் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா புதுமுகங்கள், இயக்குனர்கள், ஹீரோக்கு முக்கியம் தராமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் நல்ல மாற்றங்கள், கதையை மையமாக கொண்டு சிறு பட்ஜெட் வெளியாகும் படங்களின் வெற்றியும் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தோல்வியிலும் முடிகின்ற சூழல்கள் என்று முன்னேறி வரும் தமிழ் சினிமா.

இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் நிலை மிகவும் தொய்வு அடைந்துள்ளது என்பது உண்மை. வயதின் காரணமாக ரஜினியால் இனி அதிகளவு படங்கள் நடிக்கமாட்டார், அதேபோல் கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் அனைத்துமே பாதியில் நின்று மற்றவர்களையும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஷங்கர் கமல் கூட்டணியில் நீண்ட நாட்களாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன்2 படம் எப்போது வெளிவரும் என்ற தகவலே இல்லை.

இதனால் சங்கரும் வேறு படம் பண்ண முடியாமல் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளாராம். ரஜினி கமல் ஆகியோரின் படங்களை இனி இயக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.

அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த படம் முதல்வன் 2 என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். விஜயின் மாஸ்டர் படம் வெளியான பிறகு ஷங்கர்-விஜய் கூட்டணியின் அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top