ராஜமௌலியின் அடுத்த படம் – 1000 கோடி பட்ஜெட்டில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிக்கயிருக்கிறார்

இந்திய சினிமாவிலேயே வணிகரீதியாக வெற்றிபெற்ற இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இயக்குனருக்கு ஒரு கதையை எப்படி திரைமொழியுடன் கொள்ளப்படவேண்டும் என்பது முக்கியம் பின் ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டதாக அந்த படைப்பு வெளிப்பட வேண்டும் இதுதான் இயக்குனருக்கான அங்கீகாரம் பின்புதான் வணிகம் எல்லாம்.

தற்போது வணிகம் சார்ந்ததே இயக்குனர்கள் உருவாகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாகுபலி, பாகுபலி2 படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராமச்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் மையப்படுத்தி சுமார் 400 கோடி பட்ஜெட்டில் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ராஜமவுலியின் அடுத்த படம் சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. அந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளார்.

மகாபாரதம் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை வசனம் எழுதுகிறார். விரைவில் இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top