சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை; சிபிஐ வேண்டும் குடும்பத்தினர் வலியுறுத்தல்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின் பாலிவுட் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து எந்த பெரிய நபர்களின் பின்புலங்கள் இல்லாமல் படங்களில் நடிக்கத் துவங்கி முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை அடைந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். முழுக்க முழுக்க லாபத்தை மட்டுமே வைத்து இயங்கும் திரையுலகில் பாலிவுட் உலகமும் ஒன்று. கலை மற்றும் மனிதநேயமே திரைத்துறையின் முக்கிய நோக்கம் என்பதை தாண்டி வர்த்தகம், முதலீடு, வணிகம் என்று எப்போது பணத்தை பிரதானமாக கொண்டு இயங்க ஆரம்பித்ததோ, அன்றே திறமை, மனிதநேயம் எல்லாம் தவிர்க்கப்பட்ட ஒன்றாய் ஆகிவிட்டது. இந்திய திரையுலகில் அதுவும் குறிப்பாக பாலிவுட் துறை சார்ந்தவர்களே இது குறித்து பலர் அவ்வப்போது கூறியுள்ளனர்.

2012ல் வெளியான “kai po che” படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சுஷாந்த், தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “எம்.எஸ்.தோனி : அன்டோல்ட் ஸ்டோரி” படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அவருக்கு வயது 34. இந்நிலையில், மும்பையின் பாந்தராவில் உள்ள சுஷாந்த்தின் வீட்டில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரை போலீஸார் சடலமாக மீட்டுள்ளனர். இது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் வீட்டில் இருந்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகளும், மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் மற்றும் மருத்துவர்களையும் தொடர்புகொண்டு விசாரித்துவருவதாக கூறப்படுகிறது.

இவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவரின் குடும்பத்தார் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரின் தாய்மாமா குற்றம் சாட்டியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top