கொரோனா காலத்திலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வில் கொள்ளை லாபம்! காங்கிரஸ் விமர்சனம்

6 நாளில் ரூ44 ஆயிரம் கோடி; மார்ச் 5 முதல் ரூ.2.50 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய்: பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் பேட்டி

பெட்ரோல், டீசல் விலையை கடந்த 6 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடியும், கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் ரூ.2.50 கோடி வருவாயும் மத்தியஅரசுக்கு கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் விமர்சித்துள்ளார்

கடந்த 83 நாட்களுக்கும் மேலாக சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சியடைந்து பேரல் 20 டாலருக்கும் கீழாகச் சென்றபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தக் குறைப்பையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

அந்த விலைக் குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு அளிக்கவில்லை. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் அந்த விலை உயர்வின் தாக்கத்தை உடனடியாக மக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் சுமத்துகின்றன.

கடந்த 7 நாட்களாக சராசரியாக பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 50 பைசாவுக்கும் குறையாமல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 90 பைசாவும், டீசல் 4 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இதுகுறி்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் இன்று காணொலி மூலம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து, கடந்த 15ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால்,இ்ங்கு பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி விண்ணை முட்டும் அளவு அதிரிக்கிறது. மோடியின் அரசு சமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்

பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன்களை மக்களுக்கும், நுகர்வோருக்கும் வழங்காமல் தொடர்ந்து 7-வதுநாளாக விலைஉயர்த்தப்பட்டுள்ளது

கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் மத்திய அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது, கடந்த மார்ச் 5-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ரூ.2.50 லட்சம் கோடி மத்தியஅரசுக்குக் கிடைத்துள்ளது

சமானிய மக்களின் உணர்வுகள், நிலையைப் பற்றி சிறிதுகூட மத்திய அரசு உணர்ந்திருந்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவுவதற்கு பதிலாக, பிரதமர் மோடி, சாமானியர்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பார்

கேர் ரேட்டிங் அறிக்கையின் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய அரசு பெட்ரோலின் அடிப்படை விலையிலிருந்து 270 சதவீதம் வரியாகவும், டீசலில் 256 சதவீதம் வரியாகவும் வசூலிக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.71.41 பைசாகவாக இருந்தது. அப்போது பெட்ரோலிய கச்சா எண்ணெய் பேரல் 106.85 டாலராக இருந்தது. ஆனால், 2020 ஜூன் 12-ம் தேதி டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.61 பைசா இருக்கிறது.

இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 38 டாலர்தான். 106.85 டாலராக கச்சாஎண்ணெய் இருந்தபோது பெட்ரோல் விலை ரூ.71.41 பைசா, இப்போது 38 டாலராகஇருக்கும் போது பெட்ரோல் ரூ.75 61 பைசாவா.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசலில் வாட் வரி மட்டும் 69 சதவீதம் இடம் பெறுகிறது.அமெரிக்காவில் வாட் வரி 19 சதவீதம், ஜப்பானில் 47 சதவீதம், பிரிட்டனில் 62 சதவீதம், பிரான்ஸில் 63 சதவீதம், ஜெர்மனியில் 65 சதவீதம்தான் இருக்கிறது”  இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top