தமிழகத்தில் இன்று 1989 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 40,698ல் இருந்து 42,687 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து 14வது நாளாக ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 1956 பேர், பிற மாநிலம், நாடுகளில் இருந்து வந்த 33 பேர் என 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 17,911 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரேநாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 11ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க, 42,687 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று?- பட்டியல்

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 12 வரை ஜூன் 13 ஜூன் 12 வரை ஜூன் 13
1 அரியலூர் 378 1 13 0 392
2 செங்கல்பட்டு 2,565 136 4 0 2,705
3 சென்னை 28,938 1,484 19 3 30,444
4 கோயம்புத்தூர் 162 0 11 0 173
5 கடலூர் 494 11 27 1 533
6 தருமபுரி 19 2 5 0 26
7 திண்டுக்கல் 172 9 26 0 207
8 ஈரோடு 72 0 0 0 72
9 கள்ளக்குறிச்சி 112 11 207 0 330
10 காஞ்சிபுரம் 650 22 0 0 672
11 கன்னியாகுமரி 84 10 25 1 120
12 கரூர் 54 5 34 0 93
13 கிருஷ்ணகிரி 33 0 5 0 38
14 மதுரை 306 15 88 0 409
15 நாகப்பட்டினம் 98 1 6 1 106
16 நாமக்கல் 84 0 8 0 92
17 நீலகிரி 14 0 0 0 14
18 பெரம்பலூர் 141 2 2 0 145
19 புதுக்கோட்டை 33 0 18 0 51
20 ராமநாதபுரம் 101 0 34 0 135
21 ராணிப்பேட்டை 174 2 15 0 191
22 சேலம் 94 3 123 2 222
23 சிவகங்கை 42 13 20 0 75
24 தென்காசி 92 3 23 0 118
25 தஞ்சாவூர் 133 10 7 0 150
26 தேனி 123 0 15 0 138
27 திருப்பத்தூர் 43 2 0 0 45
28 திருவள்ளூர் 1,712 78 7 0 1,797
29 திருவண்ணாமலை 431 49 155 1 636
30 திருவாரூர் 98 14 7 1 120
31 தூத்துக்குடி 227 28 170 2 427
32 திருநெல்வேலி 156 15 269 3 443
33 திருப்பூர் 115 0 0 0 115
34 திருச்சி 148 6 0 0 154
35 வேலூர் 123 13 6 0 142
36 விழுப்புரம் 394 10 14 3 421
37 விருதுநகர் 67 1 94 1 163
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 177 13 190
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 73 1 74
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 309 0 309
மொத்தம் 38,682 1,956 2,016 33 42,687


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top