கொரோனா பீதி;சென்னையில் தீவீர நடவடிக்கை 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

 

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.ராயபுரம் கோடம்பாக்கம் என சில முக்கிய கொரோனா பாதித்த தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன


தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக  உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தபடியாக திரு.வி.க. நகரில் 54 தெருக்கள் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top