அமித்ஷா பொய் கூறுகிறார்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித்ஷாவுக்கு பதிலடி

பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இணையவழி பேரணியில் மேற்கு வங்க அரசையும் முதல்வர் மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதில் மம்தா புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயில்களை கொரோனா எக்ஸ்பிரஸ் என்று வர்ணித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார். மேலும் இப்படிக் கூறுபவரை, சிஏஏவை எதிர்ப்பவரை மக்கள் தேர்தலில் அரசியல் அகதியாக்குவார்கள் என்று காட்டமாகப் பேசினார்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மந்தா பானர்ஜி பேசும் பொது அமித்ஷா பொய் கூறுகிறார் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயிலை தான் கொரோனா எக்ஸ்பிரஸ் என்று ஒரு போதும் வர்ணிக்கவில்லை.அது சாதாரண மக்களால் அழைக்கபெற்றது

11 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெய்ர்ந்தோர் மேற்கு வங்கத்துக்கு வந்துள்ளனர். புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயில் விடப்பட்டது அதை முழுவதும் மத்திய அரசே தங்களது கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுத்தியது. மேற்கு வங்க அரசின் எந்த ஒப்புதலையும் பெறாமல் ஷ்ராமிக் ரயில் விடப்பட்டது. மாநில அரசின் ஒப்புதலை பெற்று சிறப்பு ரயிலை செயல்படுத்தினால் புலம்பெயர்ந்த மக்களுக்கு இன்னும் சிறப்பாக பாதுகாப்பு வழங்கி இருக்க முடியும்.

இந்நிலையில் ஷ்ராமிக் ரயிலை மக்கள் அவர்களது புலங்கு மொழியில் கொரோனா ரயில் என்று அழைத்தார்கள்   நான் ஒருபோதும் கொரோனா ரயில் என்று அழைக்கவில்லை. சாமானிய மக்கள்தான் அந்த ரயிலுக்கு அந்தப் பெயரை சூட்டினர்.’   

ஆனால் , அமித்ஷா பொய்களை கூறுகிறார் அதற்கு அவர் பதில் சொல்லி ஆகவேண்டும் என்று பதிலுரைத்து இருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top