அரசியல், சினிமா இரண்டிலும் செயலாற்றிய ஜெ அன்பழகன்.. இயக்குனர் அமீர் படத்தை தயாரித்தவர்

சென்னை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஜெ அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுயிருந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் காலமானார்.

62 வயதாகும் ஜெ அன்பழகன் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் திமுக கட்சிப் பணிகளில் தீவிரமாக உழைத்தவர். அரசியல் மட்டுமின்றி திரைப்படத்துறையிலும் தடம் பதித்தார். தமிழ் சினிமாவில் அன்பு பிக்ஸர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இருந்துவந்தார்.

அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் என்ற படத்தை தயாரித்தார், இதற்கு பின் சந்தீப் கிஷன், டிம்பிள் சாப்டே ஆகியோர் நடித்த யாருடா மகேஷ் என்ற படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தார். அதோடு நடிகர் விஜயின் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, அந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்ய தயார் என ஆளும்கட்சியான அதிமுகவை எதிர்த்து துணிச்சலாக கூறினார்.

இந்நிலையில் அவர் மரணமடைந்த நிகழ்வு அரசியல் பிரமுகர்கள், திமுக தொண்டர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top