ஓடிடி-ல் வெளியாகிறதா விஜய் சேதுபதியின் ‘க/பெ.ரணசிங்கம்’?

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் க/பெ.ரணசிங்கம். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை போன்று இந்தப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக படக்குழுவினர் கூறியிருப்பது : இறுதிக்கட்டப் பணிகள் இப்போது தான் தொடங்கியுள்ளோம், கொரோனா காரணமாக பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருவதால், யாரோ வேண்டுமென்றே இப்படியொரு வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர். ஆகையால் இது வெறும் வதந்தி தான். இந்தச் சமூகத்தில் உள்ள மக்கள் சந்திக்கும் பிரச்சினையைப் பேசியுள்ளோம். ஆகையால், ஓடிடி வெளியீடு சாத்தியமில்லை, படத்தின் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top