வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியால் 2006ல் கைவிடப்பட்ட முதல்படம் படத்தின் First லுக் போஸ்டர்…

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தடத்தை உருவாக்கியவர்கள். இயக்குனர் வெற்றிமாறனின் கதை உருவகம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியத்துவம் கொண்டதாகும் குறிப்பாக தமிழ் சமூகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார கதையாடல்கள், குறியீடுகளை மையப்படுத்தி இயக்கியவர்.

அந்த வகையில் இவரின் படைப்பில் உருவான “ஆடுகளம்” 2000ம் வருட தமிழ் சமூகத்தின் சேவச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் தனுஷ் தனது நடிப்பை மிக அருமையாக கையாண்டு இருப்பார். இதற்குமுன் அவர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் உருவான முதல் படமான பொல்லாதவன் பெரும் வெற்றி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் கிடைத்துள்ளன.

இந்த வெற்றி கூட்டணி முதன் முதலில் அமைந்தது பொல்லாதவன் படத்தில் தான். ஆனால் பொல்லாதவன் படத்திற்கு முன்பாகவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிக்கவிருந்தார். அந்த படத்தை தனுஷின் தங்கை டாக்டர் ஆர் கீதா என்பவர் தயாரிக்க இருந்தார். பின் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளால் அந்த படம் கைவிடப்பட்டது. 2006ல் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட அப்படத்தின் பெயர் “தேசிய நெடுஞ்சாலை”. பின்னர் சித்தார்த் நடிப்பில் உதயம் nh4 எனும் பெயரில் 2013ஆம் ஆண்டு இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த படத்தின் First லுக் போஸ்டர்…கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top