எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

எதிர்கட்சிகளின் நிர்பந்தத்தால் ,மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதில், மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓபிசி, பிசி மற்றும் எம்பிசி ஆகிய பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். நடப்பாண்டில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓபிசி பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்றும் உடனடியாக அதை கடைபிடிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், நீட் தேர்வில் கண்டுகொள்ளாமல் விட்ட மாதிரி இதில் தமிழக அரசு கோட்டை விட்டுவிடக்கூடாது என்று எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது அதன் அடிப்படையில் தமிழக அரசு மத்திய அரசை குற்றம்சாட்டி உள்ளது.மற்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது



கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top