தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 11 பேர் உயிரிழந்து உள்ளனர் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்தது. நேற்று 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்தது. 536 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 13,706 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 11 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706-லிருந்து 2,07,615-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,971-லிருந்து 5,815-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370-லிருந்து 1,00,303-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1286 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 14,316 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 610 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 208-ஆக உயர்ந்துள்ளது.

*  சென்னையில் இன்று ஒரே நாளில் 1012 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 17,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 73 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 5,28,534 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.33% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,101 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1286 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16,181 ஆண்கள், 9,677 பெண்கள், 14 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

மகாராஷ்டிரா – 16,  கர்நாடகா – 3 , டெல்லி – 5,  குஜராத் – 3

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

துபாய் – 13,  அரபு எமிரேட்ஸ் – 2


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top