கரையை கடக்க துவங்கியது நிசர்கா புயல்;மும்பை பகுதிகளில் பலத்த மழை

மும்பை அலிபாக்  கரையை நிசர்கா புயல் கடந்து வருகிறது. முழுவதும் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் மழைப் பொழிவு இருக்கும் என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிசர்கா புயல்  அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. நிசர்கா புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத், டாமன் & டியூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 3) காலை முதல் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

புயல் கரையை கடப்பதால் மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top