கொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம்!

கொரோனா வைரஸ் சிகிச்சை பணியில் தொடர்ந்து இருக்கும் டாக்டர்கள் ,நர்சுகளுக்கு மன அழுத்தத்தை போக்க  கர்நாடகா மருத்துவமனையில் நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் நான்கைந்து  இடங்களில் உள்ளன. அதுபோல் விக்டோரியா உள்ளிட்ட மருத்துவமனையில் கொரோனா   வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. 

கொரோனா வார்டில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் டாக்டர்களுக்கு  பல்வேறு சுகாதார வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா வார்டில்  பணியாற்றும் டாக்டர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  தனி அறையில் தங்கியுள்ளனர்.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதால்  டாக்டர்கள் ,நர்சுகள் உள்ளிட்டோருக்கு மன அழுத்தம் அதிகமாக காணப்பட்டு வருகிறது  

தொடர்ச்சியாக கொரோனா தடுப்பில் பணியாற்றி வரும் டாக்டர்கள் ,நர்சுகள் உள்ளிட்டோருக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட நிர்வாகம் புதிய ஒரு உத்தியை கண்டுபிடித்தது

அதாவது  மன அழுத்தம் நீங்குவதற்கு நடனம், நகைச்சுவை துணுக்குகளை கூறி அவர்களை மகிழ்வித்து சில யுக்திகள் கையாண்டார்கள் சிகிச்சை முடிந்து அறைக்கு திரும்பிய பிறகு 30 நிமிடம்  டாக்டர்கள் தினமும் ‘ஹாப்பி டான்ஸ்’ ஆடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி   டாக்டர்கள் முழு கவச உடையுடன் நடனம் ஆடி வருகின்றனர். இதுகுறித்து  டாக்டர்கள் கூறுகையில், “கொரோனா கிட் உடை அணிவதால் இருக்கமான  சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். இதை போக்க, தற்போது, நடனம் ஆடி வருகிறோம்.  இதனால், எங்கள் மனதிற்கு உற்சாகம் கிடைக்கிறது. மன அழுத்தம்  நீங்குகிறது. மேலும், சில டாக்டர்கள் மொபைலில் படம் பார்த்து  மகிழ்கின்றனர். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை எங்களுக்கு  கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம்’’ என்றனர்.

  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top