அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி!

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அப்படியே கைவிட்டது நாடு அறியும்

உலக புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களும் அரசியல்வாதிகளும் எதிர்கட்சிகளும் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு முதலில் கையில் ரூபாயை கொடுங்கள் என்றார்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதை காத்து கொடுத்து கேட்க வில்லை

இந்நிலையில் அப்படி அரசால் கைவிடப்பட்ட மூன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கருணைக்கொண்டு ஒரு மாணவி விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார்

உண்டியலில் சேர்த்து வைத்த 48 ஆயிரம் ரூபாய் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேருக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளார் 12 வயது சிறுமி.

இந்தியாவில் நாடு தழுவிய பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல உணவு கிடைக்காமலும், சம்பளம் கிடைக்காமலும் அவதிப்பட்டனர்.

இதனால் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டது. அதன்பின் அறிஞர்களும் எதிர்கட்சிகளும் எடுத்து சொன்ன பிறகு மனம் இரங்கி வந்தது மத்திய அரசு சில இடங்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. ஆனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இருந்தாலும் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர்.


தற்போது விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசால் கைவிடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரும்பாலானோர் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி நிகாரிகா திவேதி. ஜார்க்கண்ட்டில் புற்றுநோயால் பாதித்தவர் உள்பட மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டள்ளனர்.

இதையறிந்த சிறுமி உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 48 ஆயிரம் ரூபாயை கொண்டு அந்த மூன்று பேரும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.


‘‘சமூகம் நமக்கு அதிகம் கொடுத்துள்ளது, இந்த நெருக்கடியின்போது அதை திருப்பித்தருவது நமது பொறுப்பு’’ என்று நிகாரிகா திவேதி தெரிவித்தது நெகிழவைக்கிறது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top