தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை! கேரளாவில் இன்று தொடக்கம்

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை சீக்கிரமாக துவங்க உள்ளது

தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ந்தேதி தொடங்கும். ஜூன் முதல்வாரக்கணக்கில் பத்து நாட்களுக்குள் தொடங்குவதுதான் ஜூன் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்குகிறதா அல்லது முன்னதாகவே தொடங்குகிறதா என முடிவாகிறது.

2014-ம் ஆண்டில் ஜூன் 6, 2015-ல் ஜூன் 5, 2016-ல் ஜூன் 8, 2017-ல் மே 30, 2018-ல் மே 29-ல் பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 8-ல் தொடங்கும் என கணித்த நிலையில் ஜூன் 6-ல் தொடங்கியது.

அதுபோல இந்த ஆண்டு ஜூன் 5-ல் தொடங்கும் என்ற நிலையில் இன்று (ஜூன் 1) தொடங்குகிறது. அதன் அறிகுறியாக தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது.

ஆக, நமக்கு இந்தவருடம் தென்மேற்கு பருவமழை சீக்கிரமாக துவங்க உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top