ஆயிரத்தை தாண்டிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

 நேற்று முன்தினம் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்தது.இந்நிலையில் இன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,164 ஆக அதிகரிப்பு. மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு குணமானவர்களின் எண்ணிக்கை 86,984ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 12,757 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 757 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

*  சென்னையில் இன்று ஒரே நாளில் 804 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 72 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 9,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 4,91,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.12% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,807 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1149 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,065 ஆண்கள், 8,259 பெண்கள், 9 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top