கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அனுமதியை பதஞ்சலி நிறுவனத்திற்கு பாஜக அரசு கொடுத்ததா?

 

கொரோனாவுக்கு எதிரான மருந்து குறித்து ஆய்வு பண்ண பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய பிரதேச பாஜக அரசு அனுமதி கொடுத்து இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது

கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்யும் பொருட்டு சோதனை அடிப்படையில் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து ஆய்வு செய்ய பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அளித்திருப்பதாக செய்திகள் வருகின்றன  

உலகம் முழுவதும் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பொருட்டு அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பல முயற்சிகள் நடக்கிறது.உலகம் முழுதும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆங்கில மருந்துகள், சித்த மருந்துகள், ஆயுர்வேதம் என எந்த துறை மருந்துகளானாலும் அவை மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகளை வைத்தே அனுமதி அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து அவர்களது நோய் எதிர்ப்பு திறனை ஆய்வு செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக ஆட்சியர் அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு செய்து இருக்கிறார். “மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நாட்டு மக்களை கினியா பன்றிகளை போல் நடத்தக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்”.

பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். எந்த மருந்தாக இருந்தாலும் இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி பெற்றே மனிதர்களுக்கு சோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய பிரதேச அரசை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது அது போல் பதஞ்சலி நிறுவனத்திற்கு எந்தவித அனுமதியும் தரவில்லை என்றது. இதையடுத்து இந்தூர் ஆட்சியரிடம் பேசினேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்” என்று பதிவிட்டு இருக்கிறார் திக்விஜய சிங்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top