4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைத்ததாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் கூறியதாவது:-

கொரோனா ஒரு புதிய வைரஸ் என்பதால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். கொரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 மாவட்டங்களில் மட்டுமே இருக்கிறது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் முக கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும். மக்கள் அறிகுறி தென்பட்ட தொடக்க நிலையிலேயே மருத்துவர்களை அணுக வேண்டும். இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். பீதியைக் கிளப்புவதை தவிர்க்க வேண்டும்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது. தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. சென்னையில் பொது போக்குவரத்துக்கு பஸ், ரெயிலை இயக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது. சென்னையில் கொரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை

கொரோனாவில் இருந்து வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top