முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி: புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு?

anandiben

ஆனந்திபென் படேல்

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை நரேந்திர மோடி இன்று ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து குஜராத்தின் புதிய முதல்வராக நாளை ஆனந்திபென் படேல் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

குஜராத்தில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளும் நரேந்திர மோடிக்கு, எம்.எல்.ஏக்கள் பிரிவு உபசார விழா நடத்தவுள்ளனர்.

பின்னர் பிற்பகல் 3: 30 மணிக்கு மோடி, பாரதிய ஜனதா பிரதிநிதிகளுடன் சேர்ந்து ஆளுநர் கமலா பேனிவாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார். பிறகு சபாநாயகர் வஜூபாய் வாலாவை சந்தித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் அவர் சமர்பிக்கவுள்ளார்.

மோடி ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலும் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதில் புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் குஜராத் முதலமைச்சர் நாளை பதவியேற்கவுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top